Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • விடுதலை பார்ட் 1 & பார்ட் 2′ டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது

விடுதலை பார்ட் 1 & பார்ட் 2′ டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது

admin January 29, 2023
விடுதலை பார்ட் 1 & பார்ட் 2' டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று

விடுதலை பார்ட் 1 & பார்ட் 2' டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. இதற்கான க்ளிம்ப்ஸை படக்குழு நேற்று வெளியிட்டது

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பலராலும் எதிர்பார்க்கப்படும் படமான ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை தேசிய விருது வென்ற இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். சூரி மற்றும் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு ஜனவரி 26, 2023-ல் டப்பிங் பணிகளை எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தன் போர்ஷனுக்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளார். போஸ்ட் புரொடக்சன் பணிகளும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட, படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ வெளியாக இருக்கும் தேதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் மிக அதிக பொருட்ச்செலவிலும் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருக்க வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Post navigation

Previous Vijay Sethupathi & Soori starrer ‘Viduthalai Part 1 & Part 2’ dubbing work started
Next பிசியான நடிகர்கள் பின்னால் போவது எனக்கு டென்சனான வேலை ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.