Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

admin April 23, 2023
நடிகர் சைஃப் அலிகான் 'என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!di

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார். மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

தொழில்நுட்பக்குழு விவரம்:

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

Post navigation

Previous நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளில் ‘டக்கர்’ க்ளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது
Next சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.