Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • *SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!*

*SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!*

admin June 18, 2025

*SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!*

*Ballpark Padel Club-க்காக Ceri Digital நடத்திய சண்டே ஸ்மாஷ் லீக்!*

*திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!*

இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது.

டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,
நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2 புகழ் ரினி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு அதன் பின்னர், 16 வீரர்கள் நான்கு அணிகளாக (A, B, C, D) பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டங்களின் வரிசை A vs B, C vs D, A vs C, B vs D, A vs D, B vs C என ஆட்டங்கள் நடைபெற்றன. இவையுடன், முன்னேறிய நான்கு அணிகள் இடையே அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இறுதியாக வெற்றி பெற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

நிகழ்ச்சியின் இடையே பிரபலங்களின் உரைகள், ரசிகர்களுக்கான கேம்கள், புகைப்பட தருணங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. குறிப்பாக, Celebrity vs Celebrity Doubles போட்டி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சி இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு Best Team, MVP (Most Valuable Player), மற்றும் Fan Favorite Celebrity ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த சண்டே ஸ்மாஷ் லீக், சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் திருவிழாவாகும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Post navigation

Previous என்னுடைய பாடல்கள் தான் இசை கலைக்கு வர தூண்டியது என்று விஷால் மிஸ்ரா சொல்வதைக் கேட்டு வியப்பில் உள்ளேன் !’: சையாராவின் புதிய பாடலான ‘தும் ஹோ தோ’-ல் விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார் மோஹித் சூரி*
Next *விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.