Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • நடிகர் சிலம்பரசன் பாடிய ‘பெரியார் குத்து’ பாடல் ரசிகர் கொண்டாட்டம்!

நடிகர் சிலம்பரசன் பாடிய ‘பெரியார் குத்து’ பாடல் ரசிகர் கொண்டாட்டம்!

admin September 17, 2023

தீபன் பூபதி இயக்கத்தில் வெளியான ‘பெரியார் குத்து’ சென்சேஷனலான ஹிட் பாடலாக மாறியது. இந்தப் பாடல் உருவான விதம், சந்தித்த சவால்கள், இதன் வெற்றி கொடுத்த மகிழ்ச்சி ஆகியவற்றை தீபன் இதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெரியாரின் பிறந்தநாளில் ஆன்மாவைத் தூண்டும் பாடலை வெளியிடும் நோக்கத்துடன், தீபன் பூபதி இயக்கத்தில், இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க, கார்க்கி எழுச்சியூட்டும் இந்த ‘பெரியார் குத்து’ பாடல் வரிகளை எழுதினார்.

பாடலின் எழுச்சியூட்டும் வரிகள் பெரியாரின் அபிமானிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என குழு நம்பிக்கை வைத்திருந்தது. தீபன் மேலும் கூறுகையில், “பாடல் வரிகள் நிச்சயம் ரசிகர்களையும் ஈர்க்கும்படியாக இருந்தன. மேலும், இது பெரியாருக்கு எங்கள் தரப்பில் இருந்து சிறந்த அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். பாடல் கேட்டு அன்பும் ஆதரவும் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி” என கூறினார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நீண்ட கால நண்பரான எஸ்.டி.ஆர் ஒரு நாள் எதேச்சையாக ஸ்டுடியோவுக்கு வந்தபோது, இந்தப் பாடல் வரிகளுக்கு தனது பாராட்டை வெளிப்படுத்தினார். மேலும், பாடலைத் தானே பாடுவது மட்டுமல்லாமல் வீடியோவிலும் வருகிறேன் என உறுதி அளித்தார். அது பாடலுக்கு மேலும் வலுவூட்டியது” என்றார்.

இந்த பாடல் உள்நாட்டு பார்வையாளர்களின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் தமிழ்ச் சங்கங்களில் கிடத்த பாராட்டுகளும் விருதுகளும் இந்தப் பாடல் உலகளாவிய பார்வையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்திய தாக்கத்துக்கு சான்றாக நிற்கின்றன.
பெரியார் குத்து’ பாடலை இன்றும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு தீபன் நன்றி தெரிவித்துள்ளார். இறுதியாக தீபன் கூறுகையில், “எதிர்காலத்தில் பெரியாருக்கு அர்ப்பணிக்க இன்னும் ஒரு பாடலை உருவாக்க நான் திட்டமிடுவேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி” என்று கூறினார்.

Post navigation

Previous The lead cast and crew of Jawan dazzled the stage at the post release press conference event! Anirudh and Raja Kumari performed for the media and fans!*
Next சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.