Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • ஃ (அக்கு) திரை விமர்சனம்

ஃ (அக்கு) திரை விமர்சனம்

admin October 14, 2023
Akku Movie Review

Akku Movie Review

திரைப்பட எடிட்டராக பணியாற்றும் பிரஜன் மாடலும், நடிப்பில் ஆர்வமாக இருக்கும் காயத்ரி ரெமாவை காதலிக்கிறார். இவரின் நண்பர்கள் பிரபல இயக்குனர் ஸ்டாலினிடம் உதவி இயக்குனர்களாக புதிதாக சேர்கின்றனர். தன் காதலி காயத்ரிக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருமாறு பிரஜன் நண்பர்களிடம் கூறுகிறார். நண்பர்களின் சிபாரிசின் பேரில் காயத்ரி இயக்குனரை பார்க்க செல்கிறார். அதன் பின் காதலி காயத்ரி கற்பழித்து கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் பார்க்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் பிரஜன், தன் நண்பர்களை தேடுகிறார். இயக்குனரும், நண்பர்களும் தலைமறைமாகிவிட்டதை கண்டு, அவர்களை கண்டுபிடிக்கச் செல்கிறார். அதே சமயம் மனநல மருத்தவர் கண்காணிப்பில் இருக்கும் நோயாளி ஒருவர் வரையும் ஒவியம்; அடுத்து யாரை பழி வாங்கப் போகின்றனர் என்பதை தெரிந்து போலீஸ் அதற்கு முன் கொலையை தடுக்க செல்கின்றனர். தலைமறைவான நண்பர் தேடி பிரஜின் செல்லும்போது, ​​அவர்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கொலைக்கான அனைத்து பழிகளும் பிரஜின் மீது விழுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். பிரஜை பார்க்க செல்லும் அத்தனை பேரையும் கொன்றதன் பின்னணி என்ன? அவர்களைக் கொல்வது யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பிரஜன் காதலனாக தன் காதலியின் இழப்பை தாங்க முடியாமல் கதறும் இடங்களிலும், கொலை செய்தவர்களை பழி வாங்க செல்ல, அங்கே எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களின் மர்மத்தை கண்டு பிடிக்க முடியாமல் தப்பி ஒடுவதும், தன் காதலியின் பரிதாப நிலையையும், கதறலையும் பார்த்து இறுதியில் என்ன செய்வதென்று தெரியாமல் பிரமை பிடித்தது போல் இருக்கும் சூழ்நிலையை சிறப்பாக செய்துள்ளார்.

இவரின் காதலியாக வரும் காயத்ரி ரெமா இவரைச் சுற்றித் தான் கதை பயணிப்பதால் சிறப்பாக செய்துள்ளார். இன்னொரு உதவி இயக்குநராக வருகிற ‘கலக்கப் போவது யாரு’ சரத், மனநல நிபுணராக வருகிற ராமநாதன், ஓவியராக வருகிற வடக்குவாசல் ரமேஷ் என படத்தின் மற்ற நடிகர்களின் பங்களிப்பில் நிறைவாக செய்வதால் குறையில்லை.

பின்னணி இசை – சதீஷ் செல்வம், ஒளிப்பதிவு- தேவசூர்யா, படத்தொகுப்பு-அரவிந்தன் ஆறுமுகம் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்துள்ளது.

திரைத்துறையில் நடக்கும் சம்பவங்களாக திரைக்கதையமைத்து இதனை மையமாக வைத்து கிரைம் திரில்லராக இறுதி காட்சி வரை நகர்த்தி கிளைமாக்ஸ் நெருங்கும்போது எதிர்பாராத பென்னை வைத்து பெண்ணின் ஹாரர் கதையை இன்னும் அழுத்தத்தோடு கொடுக்க முயற்சித்திருக்கலாம் இயக்குனர் வெ.ஸ்டாலின்.

Post navigation

Previous Chennai Kaalpandhu League Season 3 comes to a close by displaying some talented individuals
Next சமரா திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.
You cannot print contents of this website.